இந்தியாவில், மன்னராட்சியில் கூட இல்லாத அளவுக்கு மக்களாட்சியில் வரி விதிக்கப்படுவதாக டி.ராஜேந்தர் விமர்சித்துள்ளார். மேலும் பத்திரிகையாளர்களுடன் டி.ராஜேந்தர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்கு எதிராக லட்சிய திமுக கட்சியின் சார்பில், சென்னை ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற டி.ராஜேந்தர், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் காரணமாக நாட்டு மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி இருப்பதாக கண்டனம் தெரிவித்தார்.
சினிமாத்துறை மட்டுமின்றி, நாட்டில் உள்ள அனைத்து தரப்பு வணிகர்களும், மக்களும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி மீது அதிருப்தி ஏற்படுவதற்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பே காரணமாக அமையும் என்றும் விமர்சித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு டி.ராஜேந்தர் பதிலளித்தார். நடிகர் கமல் தொடர்பாக கேட்கப்பட்டதற்கு, அவருக்கும் தமக்கும் பல்வேறு விஷயங்களில் மாற்றுக் கருத்து இருந்தாலும், ஜி.எஸ்.டி. வரிக்கு தாம் எதிர்ப்பை பதிவு செய்த பின்னர் கமல்ஹாசனும் எதிர்ப்பை பதிவு செய்ததாக குறிப்பிட்டார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்த செய்தியாளர் ஒருவர், லட்சிய திமுக போராட்டத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பியதால், ஆவேசமடைந்த டி.ராஜேந்தர், வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.