புதன், 19 ஜூலை, 2017

உலக விமான கண்காட்சியில் பங்கேற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்கள்! July 19, 2017


உலக விமான கண்காட்சியில் பங்கேற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்கள்!


"கலாம் சாட்" என்ற பெயரில் கையடக்கச் செயற்கைக்கோள் தயாரித்து விண்ணுக்கு அனுப்பிய தமிழகத்தை சேர்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பினர் ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக விமான கண்காட்சியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு தமிழகத்திற்கு பெருமை சேர்த்து உள்ளனர்.  

உலகின் சிறிய எடையிலான செயற்கைகோள் தயாரித்து நாசாவால் அனுப்பப்பட்ட “கலாம் சாட்” குழுவினருக்கு தமிழக அரசு 10 லட்சம் பரிசு அளித்து கெளரவித்தது. இந்த நிலையில் ஸபேஸ் கிட்ஸ் அமைப்பின் பணிக்கு தற்போது உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.  

உலகின்  புகழ்பெற்ற விமானக் கண்காட்சி ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதிலிரும் இருந்து 87 நாடுகளை சேர்ந்த முண்ணனி விமானம் தயாரிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன.  இந்த கண்காட்சியில்  கலாம் சாட் குழுவினர் தயாரித்த செயற்கோள் மாதிரிகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. 

தமிழக மாணவர்களின் கண்டுபிடிப்புகள் ரஷ்ய வர்த்தக துறை அமைச்சர் மனம் திறந்து பாராட்டியதோடு, இந்தியாவிலிருந்து அதிகளவில் மாணவர்கள் இத்தகைய பணியில் ஈடுபட வேண்டும் என்றும், அதற்கு ரஷ்யா உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தாக ஸ்பேஸ் கிட்ஸ் தலைவர் ஶ்ரீமதி கேசன் தெரிவித்துள்ளார். 

 ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவன பணியை அங்கீரிக்கும் வகையில், ரஷ்ய தொழில் மற்றும் வர்த்தக துறை - ஸ்பேச் கிட்ஸ் இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்து போட்டுள்ளது  என்றும், அடுத்த ஆண்டு அரசு பள்ளிகளிலிருந்து அதிகளவில் மாணவர்கள் ரஷ்யா கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கலாம் சாட் தயாரித்த ரிபாத் சாருக் உள்ளிட்ட 7 மாணவர்களும், மூன்று பள்ளிகூட மாணவர்களும் கலந்துகொண்டுள்ளனர். ரஷ்யாவில் நடைபெற்று வரும் இந்த கண்காட்சியில் பங்கேற்றதால் பல புதிய அனுபவங்களை பெற்றுள்ளதாக தமிழகம் திரும்பியவுடன், புதிய முயற்சிகள் மேற்கொள்ள படும் என்கிறார் ரிபாத்.

Related Posts: