வியாழன், 20 ஜூலை, 2017

மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்தி பெயர் பலகை மீது கருப்பு மை பூசி அழிப்பு! July 20, 2017

மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்தி பெயர் பலகை மீது கருப்பு மை பூசி அழிப்பு!


இந்தி திணிப்பிற்கு எதிராக கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர எதிர்ப்பு வலுவடைந்து வருகின்றது. 

இந்நிலையில் பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையங்களில் இருக்கும் இந்தியில் எழுதப்பட்டிருக்கும் பெயர்ப்பலகைகளை கர்நாடக மக்கள் மற்றும் உள்ளூர் கன்னட அமைப்புகள் இணைந்து மறைத்தும் அகற்றியும் வருகின்றனர்.

நேற்று பெங்களூரு சிக்கப்பட்டு ரயில் நிலையத்தில் இருக்கும் இந்தியில் எழுதப்பட்டிருந்ததை மறைத்த நிலையில், யஸ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் இந்தியில் எழுதப்பட்டிருந்த பெயர்ப்பலகைகளை கன்னட அமைப்பான ரக்‌ஷனா வேதிகே கருப்பு மைகளைக் கொண்டு நேற்று இரவு அழித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்திரா நகர், தீபாஞ்சலி மெட்ரோ ரயில் நிலையத்தில் எழுதப்பட்டிருக்கும் பெயர்பலகைகளையும் சுவரொட்டிகள் கொண்டு மறைத்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Related Posts: