சட்டீஸ்கர் மாநிலத்தில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை விரட்டிச் சென்று மாணவிகள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராய்ப்பூர் நகரத்தில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் பேராசிரியர் ஒருவர் அங்கே பயிலும் மாணவிகளுடன் தவறாக பேசியதாகவும் பாலியல் படங்களை காட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து வெளியே கூறினால் மதிப்பெண்கள் குறைக்கப்படும் எனவும் மிரட்டியுள்ளார். இருப்பினும் பேராசிரியரின் தொல்லை அதிகரித்ததால் கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர் மாணவிகள், சம்பந்தப்பட்ட ஆசிரியரை விரட்டுச்சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இருப்பினும், ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கல்லூரி வளாகத்தின் முன்பு மாணவிகள் கோஷங்களை எழுப்பி ஆர்பட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்ட பின்பு மாணவிகள் கலைந்து சென்றனர்