வியாழன், 20 ஜூலை, 2017

கார்த்தி சிதம்பரத்திற்கு சிபிஐ மீண்டும் நோட்டீஸ்! July 20, 2017

கார்த்தி சிதம்பரத்திற்கு சிபிஐ மீண்டும் நோட்டீஸ்!


ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு முதலீடுகளை பெற்று தந்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை விசாரணைக்கு ஆஜராக சி.பி.ஐ. மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு 305 கோடி ரூபாய்க்கு அதிகமான வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுதர, கார்த்தி சிதம்பரம் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

2007-08ம் ஆண்டில் வெளிநாடு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மூலம், ஐஎன்எக்ஸ் மீடியா குழுமத்திற்கு ஒப்புதல் வழங்கியதில் லஞ்சப் பணம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பான வழக்கில், கார்த்திக் சிதம்பரம் நேரில் ஆஜராக கடந்த மே 18ம் தேதி சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், அந்த சம்மனுக்கு கார்த்தி சிதம்பரம் ஆஜராகாத நிலையில், வரும் 21-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக  கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ.நோட்டீஸ் அனுப்பியுள்ளது

Related Posts: