சனி, 19 மார்ச், 2022

தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

18 3 2022 அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

தமிழகத்தின் 2022-23ம் நிதியாண்டுக்கான காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முழுமையாக தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் இதுவாகும்.

இந்த பட்ஜெட்டில் கல்வித் துறைக்கும் இயற்கைக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


அரசு பள்ளியில் படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு அரசுப் பள்ளி மாணவிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், உயர்கல்வி படிக்க ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/government-school-students-rs-1000-per-month-for-higher-education/

Related Posts: