தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருபவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதில் அவர் மின்சாரத்துறையில் ஊழல் நடந்துள்ளதாக அவர் கூறி வரும் குற்றச்சாட்க்கு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தல்பாலாஜி தங்க பதிலடி கொடுத்து வரும் நிலையில், தற்போது அவர் அண்ணாமலை குறித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.
தமிழக மின்சாரத்துறையின் விதிகளை மீறி ரூ 4442 கோடி ஒப்பந்தம், பிஜிஆர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாகவும், அமைச்சர் செந்தில் பாலாஜி அந்நிறுவனத்தின் ஊழியர்போல் செயல்படுவதாகவும், அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார் ஆனால் இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்த அமைச்சர் செந்தல’பாலாஜி, அண்ணாமலை இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் என்று ஒருநாள் கெடு வைத்திருந்தார்.
இந்த கெடுவுக்கு பதில் அளித்துள்ள அண்ணாமலலை எனக்கு கெடு வைக்க அவர் என்ன கடவுள் பிரம்மாவா? நாமக்கல் இருளர்பாளையத்தில், நிறுவனம் ஒன்று மின்வாரியத்துக்கு ரூ25 லட்சம் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், அந்நிறுவனத்தின் உரிமையாளர் அமைச்சரின் உறவினர் என்பதால், அமலகாக்கத்துறை சோனையை அமைச்சர் செந்தில் பாலாஜி தடுத்து நிறுத்தியதாக புதிய குற்றச்சாட்டை கூறியிருந்தார்.
மேலும் மின்வாரியம் தொடாபான பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்த அண்ணாமலை, பிஜிஆர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். .இது தொடர்பாக காவல்துறை தன்மீது நடவடிக்கை எடுத்தாலும் அதை சந்திக்க தயார் என்று என்றும் கூறியிருந்தார்.
தற்போது அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி, பிஜிஆர் (BGR) நிறுவனம் டெண்டர் எடுத்த ஆண்டு 2019. டெண்டர் கொடுத்த ஆட்சி அதிமுக என்று கூறியுள்ள அவர், வாழ்ந்த 13700+ சொச்ச நாட்களில் 20000 புத்தகம் வாசித்திருக்கும் அதிமேதாவி ஆர்வக்கோளாறுகளுக்கு புரிதல் வேண்டும் அல்லது புரிந்து கொள்ள பக்குவம் வேண்டும். அரைவேக்காடுகளுக்கு இரண்டும் இல்லை என கூறியுள்ளார்.
18 3 2022
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-minister-senthil-balaji-reply-to-annamalai-corruption-criticise-427158/