ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அண்மையில், வெளியிட்ட சுற்றறிகையில், ஆவணங்கள் ஹிந்தியில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டதைக் கண்டித்து புதுச்சேரி திமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சிவா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில், இந்தி திணிக்கப்படுவதைக் கண்டித்து புதுச்சேரியில் எதிர்க்கட்சியாக உள்ள திமுகவினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கு முன்னதாக, ஜிப்மரில் இந்தி திணிப்பு எதுவும் இல்லை என்றும், பிராந்திய மொழியான தமிழுக்கு உரிய முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றும் வலியுறுத்தினார்.
ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சமீபத்திய சுற்றறிக்கையில், பதிவுகளில் ஹிந்தி மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட புதுச்சேரி திமுகவின் ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சிவா தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட திமுக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜிப்மர் சுற்றறிக்கைகளிலும் பதிவுகளிலும் இந்தியைப் பயன்படுத்துவது குறித்து முதன்மை நிறுவனம் வெளியிட்ட சுற்றறிக்கைக்கு சில உள்ளூர் இளைஞர்கள் உட்பட போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்களும் கோஷங்களும் எழுப்பப்பட்டன. ஜிப்மர் ஏற்கனவே உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை மறுத்து வருவதாகவும், தற்போதைய சுற்றறிக்கையில் இந்தி மொழியை பயன்படுத்துவதற்கு உத்தரவிட்டிருப்பது உள்ளூர் மக்களுக்கு மற்றொரு அடியாகும் என்றும் சிவா குற்றம் சாட்டினார்.
“ஜிப்மர் வெளியிட்ட அந்த சுற்றறிக்கை நிபந்தனையின்றி திரும்பப் பெறப்பட வேண்டும்” என்று போராட்டத்தில் கூறினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், தமிழக சட்டப்பேரவை உறுப்பினருமான டி.வேல்முருகனும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, இது இந்தி திணிப்பு என்று கூறினார். ஜிப்மருக்குச் சென்று இயக்குநர் ராகேஷ் அகர்வாலுடன் ஆலோசனை நடத்திய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “ஜிப்மர் நிறுவனத்தில் எந்த வகையிலும் இந்தி திணிப்பு இல்லை என்றும், தமிழ், மொழிக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது” என்றும் கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-protests-against-hindi-imposition-in-jipmer-tamilisai-soundararajan-asserts-tamil-given-priority-451745/