செவ்வாய், 10 ஜனவரி, 2023

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு

10 1 2023

இந்தோனேசியாவில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா நாட்டில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் டனிம்பர் தீவு என்னும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று இரவு 10.47 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பயங்கர அதிர்வின் காரணமாக வீடுகளில் தூங்கி கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு பொதுவெளிகளிலும், சாலைகளிலும் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகி உள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த சக்தி வாய்த நிலநடுக்கம் காரணமாக இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்தோனேசியாவில் சுமத்ரா தீவின் வடக்கு பகுதியில் இந்த ஆண்டின் தொடங்கத்தில் (ஜனவரி,02) நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் சாலையில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2-ஆக பதிவானதாக புவியியல் மையம் தெரிவித்திருந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தோனேசியாவில் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

source https://news7tamil.live/terrible-earthquake-in-indonesia-tsunami-warning-notice.html