6 2 23
அதானி குழும விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் குறித்து வெளியிட்டு ஆய்வறிக்கை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் பங்குச்சந்தைகளில் அதானி குழும நிறுவனங்களில் சுமார் 8 லட்சம் கோடி வரை இழப்பீடுகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அதானி குடும்பங்களில் எல்ஐசி பொதுத்துறை நிறுவனமும் எஸ்பிஐ வங்கியும் பல கோடி அளவிற்கு முதலீடுகள் செய்துள்ளது. அவற்றிலும் தற்போது இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளன. குழுமங்களில் ஏற்பட்டுள்ள இழப்பு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அதில் செய்துள்ள முதலீடுகளால் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து மத்திய அரசும் செபியும் உரிய விளக்கம் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் அதானி குழுமத்தால் எஸ்பிஐ மற்றும் எல்ஐசி நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள இழப்புகளை சித்தரிக்கும் வகையில் அதானி முகமூடி அணிந்து ஒருவருக்கு மொட்டை அடித்து நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசும் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் செபியும் அதானி குழும முறைகேடுகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி முழக்கங்களை எழுப்பி பதாகைகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எல்ஐசி மற்றும் எஸ்பிஐ பொதுத்துறை நிறுவனங்கள் அதானி நிறுவனத்திற்கு பொருளாதார உதவி அளித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார். கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டங்களின் நிதியை பாஜக ஆட்சியில் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. பாளையங்கோட்டையில் காங்கிராசார், அதானி முகமூடி அணிந்து மொட்டை அடித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, மத்திய அரசு, பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம், செபி ஆகியவை அதானி குழும முறைகேடுகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.
மயிலாடுதுறையில் எஸ்பிஐ வங்கியின் அலுவலகம் முன்பு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மத்திய அரசு மற்றும் அதானி நிறுவனத்திற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். உச்சநீதிமன்றம் அதானி குழுமத்தின் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் எஸ்பிஐ வங்கி முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசை கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.
source https://news7tamil.live/adani-row-congress-to-launch-nationwide-protests-outside-lic-sbi-offices-today.html