திங்கள், 6 பிப்ரவரி, 2023

விமர்சனம் செய்பவர்களை தேசவிரோதியாக பார்ப்பது பாசிசத்தின் உச்சம் – இயக்குனர் வெற்றிமாறன்

 5 2 23

ஒரு விமர்சனம் வரும்போது விமர்சனம் செய்பவர்களை தேசவிரோதியாக பார்ப்பது பாசிசத்தின் உச்சம் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

பிபிசி சேனல், “ India:The Modi Question” என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படம்  2002ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் குறித்து எடுக்கப்பட்டுள்ளது. அப்போதையை குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி தவறாக சித்தரிக்கப் பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்தது. மேலும் உண்மைக்கு மாறாக  இந்த  ஆவணப்படம் இருப்பதாக கூறிஇந்தியாவில் வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது.


இந்த தடை உத்தரவை மீறி அந்த ஆவணப்படத்தை திரையிட்டும், திரையிட முயற்சித்தும் பல மாணவர்கள் போராட்டங்களை மேற்கொண்டனர். பிபிசி ஆவணப்படத்திற்கு தடைவிதித்த மத்திய அரசு உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  பிபிசி ஆவணப்பட தடையை நீக்க கோரிய மனு மீது மத்திய அரசு பதில் அளிக்கவும் ஆவணப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடைக்கான அசல் உத்தரவையும் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் பிபிசி தயாரித்த  பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழாக்கம் செய்யப்பட்டு கட்சியின் தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில் திரையிடபட்டது.

விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இந்த ஆவணப்பட திரையிடல் நிகழ்ச்சியில்  விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை ரவிக்குமார், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலிபூங்குன்றன், திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு  பேசிய இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்தாவது…

ஒரு விமர்சனம் வரும்போது விமர்சனம் செய்பவர்களை தேசவிரோதியாக பார்ப்பது பாசிசத்தின் உச்சம் . அதனையும் தாண்டி பிபிசியின்  ஆவணப் படத்தை  வெளியிட முயற்சி  செய்த  விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.” என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்தார்.

– யாழன்


source https://news7tamil.live/viewing-critics-as-anti-national-is-the-height-of-fascism-director-vetrimaran.html