திங்கள், 6 பிப்ரவரி, 2023

அதானி குழுமம் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் இன்று போராட்டம்

 

6 2 23

அதானி குழுமம் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் இன்று போராட்டம்

அதானி குழுமத்திற்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நாடு முழுவதும் இன்று போராட்டம் நடத்தவுள்ளதாக என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது என்றும் அக்குழுமத்துக்கு அதிக அளவில் கடன் உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தது. மேலும் அதானி குழுமத்தைச் சார்ந்த 7 நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்கு புறம்பான முறையில் வலுவாக காட்டுகிறது என்றும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையால் அதானி குழுமம் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்துள்ள நிலையில் எஸ்.பி.ஐ. கடன் வழங்கி உள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை இரு நாட்களாக அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து நாடாளுமன்ற இருஅவைகளும் முடங்கின.

இந்நிலையில், அதானி முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியான புகார்கள் குறித்து எந்த ஒரு விசாரணையும், நடவடிக்கையும் எடுக்காமல் பிரதமர் மவுனம் காத்து வருகிறார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இதனை கண்டித்து இன்று நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

source https://news7tamil.live/congress-protests-today-to-condemn-the-central-government-on-the-adani-group-issue.html