சனி, 4 பிப்ரவரி, 2023

பழையவகை கொரோனா வைரஸ் மான்களில் இன்றும் காணப்படுகிறது: புதிய ஆய்வு

 

3 2 23

பழையவகை கொரோனா வைரஸ் மான்களில்  இன்றும் காணப்படுகிறது: புதிய ஆய்வு

வெள்ளை வால் மானில் கொரோனா வைரஸ்லின் முந்தைய வேரியண்ட் இன்றும் இருப்பதாக புதிய ஆய்வு கண்டுபிடித்துள்ளது.

கொரோனாவின் முந்தைய வேரியண்ட்டான அல்பா மற்றும் காமா வகைகள் இன்னும் வெள்ளை வால் மானில் இருப்பதாக புதிய ஆய்வு கூறுகிறது. தற்போது அந்த வேரியண்ட் மனிதர்களிடத்தில் பரவதாபோதும் மான்களிடத்தில் இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.

ஆனால் வெள்ளை வால் மான்களுக்குள் அந்த பழையவகை கொரோனா வைரஸ் பரவுகிறதா என்று கேட்டால் அதற்கு விடை இல்லை என்று கூறுகிறார் ஆய்வாளர் மருத்துவர் டிகோ டியல். இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்தான் மருத்துவர் டிகோ டியல்.

டிசம்பர் 2021-ம் ஆண்டு கிடைத்த மாதிரிகளை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

ஆய்வு கூறும் தகவல்

வெள்ளை வால் மானில் கொரோனா வைரஸை மனிதர்கள் தொடர்ந்து செலுத்தியதாகவும். இதனால் அந்த மான்கள் கொரோனா வைரஸை பரப்பியதாகவும் கூறப்படுகிறது.  இது அமெரிக்கா மற்றும்  கனடாவில் காணப்பட்டது.  ஆனால் மனிதர்கள் எப்படி கொரோனா வைரஸை மானிற்கு பரப்பினார்கள் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.

ஒரு வேளை மானிற்கு தீனிபோடும்போது, கொரோனா வைரஸ் மானிற்கு பரவியிருக்கலாம். இல்லையென்றால் மனிதக் கழிவு அல்லது குப்பையையோ மான்கள் சாப்பிடும்போது இது நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கனடாவில் உள்ள ஒன்டாரியோ மாகாணத்தில் ஆய்வு செய்ததில் மானிலிருந்து கொரோனா மனிதர்களுக்கு பரவியதாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஒரு நபருக்கு மட்டுமே அப்படி கொரோனா வைரஸ் பரவியதால் அதை கணக்கில் நாம் எடுத்துகொள்ள முடியாது.

இந்த ஆய்வு எப்படி நடத்தப்பட்டது ?

ஆய்வாளர் டிகோ டியல் மற்றும் அவருடன் பணி செய்பவர்கள் அனைவரும் வேட்டையாடிகளால் வேடையாடப்பட்ட  மான்களின் 5,500 சதை மாதிரிகளை ஆய்வு செய்தனர்.  இந்த மான்கள் நியூயார்க் நகரத்தில் உள்ளவை. மேலும் இந்த ஆய்வு செப்டம்பர் 2021 முதல் டிசம்பர் 2021 வரை நடத்தப்பட்டது.

2020-ல் ஆய்வு செய்யப்பட்ட 0.6% மாதிரிகள் கொரோனா பாசிடிவாக வந்தது. 2021- இது 21 % ஆக அதிகரித்தது. 2022-ல் ஆய்வு செய்யப்பட்ட போது 3 வகை அதாவது ஆல்பா, காமா , டெல்டா வகை கொரோனா வைரஸ் காணப்பட்டது.

இந்த காலத்தில்தான் நியூயார்க் மக்களிடம் டெல்டா வகை கொரோனா அதிகமாக பரவியது. ஆனால் ஆல்பா மற்றும் காமா வகை கொரோனா மனிதர்களிடத்தில் பரவவில்லை.  

source https://tamil.indianexpress.com/explained/deer-could-be-reservoir-of-old-coronavirus-variants-what-a-new-study-says-587542/