ஞாயிறு, 18 ஜூன், 2023

ஆளுநருக்கு தமிழ்நாடு என்று கூறுவதற்கு பயம்- எம்.பி கனிமொழி

 18 6 23

ஆளுநருக்கு தமிழ்நாடு என்று கூறுவதற்கு பயம்- கனிமொழி எம்பி ஆளுநருக்குத் தமிழ்நாடு என்று கூறுவதற்குப் பயம்  என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருப்பூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி, மகளிர் தொண்டரணி சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா  நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி  முன்னிலையில்  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 13-லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 300-மேற்பட்ட பயனாளிகளுக்குத் தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, ஊட்டச்சத்துப் பொருட்கள், அரிசி மற்றும் மளிகை பொருட்களை பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி வழங்கினார்.

இந்நிகழ்வில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “ஆளுநருக்குத் தமிழ்நாடு என்று கூறுவதற்குப் பயம். தமிழ்நாடு என கூறினால் தனித்துவம் வந்து விடும் என்பதால் தமிழகம் என கூறுகிறார். அமைச்சர் பதவியில் யார் இருக்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டியது முதலமைச்சர் தான் ஆளுநர் கிடையாது. ஆளுநர் முடிவு செய்ய நினைத்தால், தேர்தலில் நின்று வெற்றி பெற்று முடிவு செய்ய வேண்டும்” எனக் கூறினார்.

source https://news7tamil.live/afraid-to-say-tamil-nadu-to-governor-mp-kanimozhi.html


Related Posts: