வெள்ளி, 9 ஜூன், 2023

வெயில் உச்சத்தை பெரும் அபாயம்: தமிழக மக்களுக்கு எச்சரிக்கை

அதிகபட்ச வெப்பநிலை: 08 6 2023

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

நாளை (09.06.2023) அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

10.06.2023 முதல் 12.06.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை:

நாளை (09.06.2023), அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 39 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2- 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌர்கரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40- 41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29- 30 டிகிரி செல்ஸியஸை ஒட்டியே இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/temperature-rises-in-tamil-nadu-for-8th-9th-june-2023-690984/ 



Related Posts: