திங்கள், 10 ஜூலை, 2023

அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்; பொதுமக்கள் அச்சம்!

 10 07 2023

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் பகுதியில் ஓரளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துருக்கி மற்றும் சிரியாவில் தொடர்ச்சியாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 50,000க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், லட்சக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தனர். உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த பயங்கர நிலடுக்கம், துருக்கி மற்றும் சிரியாவை தலைகீழாய் புரட்டிப் போட்டது.

இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. பெரிதளவிலான உயிர்ச்சேதங்கள் இல்லாதபோதிலும், பொருட்சேதங்கள் ஏற்பட்டன.

இந்நிலையில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் பகுதியில் ஓரளவுக்கு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது அங்கே கேம்ப்பெல் விரிகுடாவில் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கேம்ப்பெல் விரிகுடாவில் இருந்து 162 கிமீ தொலைவில் தென்கிழக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால், பல கட்டடங்கள் அதிர்ந்து குலுங்கின. கட்டடங்களில் அதிர்வு ஏற்பட்டதுமே, பொதுமக்கள் பதறியடித்துக் கொண்டு உடனடியாக கட்டிடங்களை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

source https://news7tamil.live/earthquake-in-andaman-nicobar-islands-public-fear.html

Related Posts: