செவ்வாய், 4 ஜூலை, 2023

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம்: அரசு முன்வைத்த முக்கிய கோரிக்கை இதுதான்

 காவிரி மேலாண்மை ஆணையம்

காவிரி மேலாண்மை ஆணையம்

ஜூலை மாதம் வழங்க வேண்டிய நீரை வழங்க உத்தரவிடக் கோரி, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதம் அனுப்பி உள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  குறைந்துள்ளதால் பாசனதிற்கு திறக்கும் அளவு  குறைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் காவிரி ஆணையம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை பெறுவதற்கான நடவடிக்கைகளை உறுதியோடு தமிழக அரசு  முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் ஜூலை மாதம் வழங்க வேண்டிய நீரை வழங்க உத்தரவிடக் கோரி, காவிரி மேலாண்மை  ஆணையத்திற்கு  தமிழக அரசு கடிதம் அனுப்பி உள்ளது. இதன்படி வழக்கமான அளவை விட, குறைவான அளவு தண்ணீர் கர்நாடக அரசு திறந்து விடுகிறது என்றும், ஜூலை மாதத்திற்கான 34 டி.எம்.சி தண்ணீர் பங்கீட்டை திறந்து விட வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-government-writes-letter-to-cauvery-water-management-authority-demanding-water-of-july-month-714664/