நடக்கும் ரோபோவை உருவாக்கிய அரசுப் பள்ளி மாணவனை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பாராட்டினார்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அப்துல்கலாம் சிலை மற்றும் ராக்கெட் மாதிரி திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டார்.
அப்போது, ஈரோட்டைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவன, உருவாக்கிய ரோபோவிற்கு பாராட்டு தெரிவித்தார். பின்ர் உரையாற்றிய அவர், விண்வெளி மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேறி வருகிறது என்றார்.
இந்தியா மட்டும் தான் சந்திராயன் விண்கலம் மூலம் நிலவில் தண்ணீர் உள்ளதை நிருபித்தது என்றும் அவர் தெரிவித்தார். அப்துல் கலாம் கனவை மாணவர்கள் நனவாக்கி வருவது உறுதியாகி உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
source https://news7tamil.live/a-government-school-student-who-built-a-walking-robot-former-isro-director-mylaswamy-annadurai-expressed-appreciation.html