இந்திய எல்லையையோரமுள்ள தனது பகுதியில் புதிய அதிவிரைவு சாலை ஒன்றை சீன அரசு திறந்துள்ளது.
அருணாச்சலப் பிரதேசம் எல்லையோரம் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 409 கிலோ மீட்டர் நீளமுள்ள அதிவிரைவுச்சாலையை சீனா போக்குவரத்துக்கு திறந்துவிட்டுள்ளது. கனரக வாகன பயன்பாட்டுக்கு இந்த சாலையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனினும் ராணுவத் தளவாடங்களை எல்லைப்பகுதிக்கு விரைவாக கொண்டு வரும் நோக்கிலேயே இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் இந்திய - சீன எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.