ரோகிங்கியா முஸ்லிம்கள் இந்தியாவில் தொடர்ந்து வசிக்க அனுமதிக்கக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்தியாவில் இருக்கும் ரோகிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல என்றும், சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு கருதி இவ்விஷயத்தில் மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் செயல்பட்டிருப்பது சரியான நடவடிக்கை என சுரேஷ் பையாஜி ஜோஷி கூறியுள்ளார். வெளிநாட்டவர்கள் யார் வேண்டுமானாலும் இந்தியாவிற்கு வந்து, குடிமக்களாக ஆகிவிடலாம், யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள் என்ற நிலை இருக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.