குஜராத்தின் ஆனந்த் நகரில் தலித் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அனந்த் மாவட்டத்தின் பத்ரனியா கிராமத்தில் தசரா விழா நடந்தது. இந்த விழாவின் ஒரு பகுதியாக கடந்த சனிக்கிழமை இரவு கர்பா நடன நிகழ்ச்சி நடைபெற்றது. தசரா நிகழ்ச்சிகளை காண அதே கிராமத்தைச் சேர்ந்த ஜயேஷ் சோளங்கி (21) என்ற தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் சென்றுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து கொலை சம்பத்தில் தொடர்புடைய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும் தலித்துகளுக்கு எதிரான இதுபோன்ற தாக்குதல்கள் வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.