FIR Against Udhayanidhi Stalin: சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழ்நாடு முற்போக்கு சங்கத்தினர் சார்பாக, “சனாதன ஒழிப்பு மாநாடு” நடந்தது. இந்த மாநாட்டில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகனும், மாநில விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “சனாதன தர்மத்தை கொசு, டெங்கு, மலேரியா உடன் ஒப்பிட்டு பேசியதுடன் இதனை ஒழித்துக் கட்ட வேண்டும்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
13 9 23
இதற்கு எதிராக மாநில பாஜக சார்பில் கடும் எதிர்வினைகள் ஆற்றப்பட்டன. மேலும், காவல் நிலையங்களிலும் புகார் அளிக்கப்பட்டது.
உதயநிதியின் பேச்சுக்கு திமுக அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவ சேனா, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் உதயநிதிக்கு எதிராக தள்ளி நிற்கின்றன.
இந்த நிலையில், தாம் சனாதன ஒழிப்பு குறித்து பேசவில்லை; எதிர்ப்பு பற்றிய கருத்துகளைதான் பதிவு செய்தேன் என உதயநிதி விளக்கம் அளித்தார்.
எனினும் இந்த விவகாரம் ஓய்ந்தப்பாடில்லை. தற்போது உதயநிதி மீது மும்பை மிரா சாலை காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது, மதக் குழுக்கள் இடையே பகைமையை தூண்டுதல், மத உணர்வுகளை தீங்கிழைவிக்கும் வகையில் புண்படுத்துதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக உதயநிதி ஸ்டாலின் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153ஏ, 295 ஏ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/fir-against-udhayanidhi-stalin-in-mumbai