செவ்வாய், 16 ஜூலை, 2019

ஹெல்மெட் அணியாதவரின் மண்டையை லத்தியால் உடைத்த காவலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு! July 16, 2019

Image
ஹெல்மெட் அணியாதவரின் மண்டையை லத்தியால் உடைத்த காவலர் மற்றும் ராமநாதபுரம் எஸ்.பி. 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த வெள்ளுர் என்பவர் தமது மனைவி மாரிக்கண்ணு மற்றும் கண்ணன் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் துரத்தியேந்தல் பகுதிக்கு சென்றனர். இ.சி.ஆரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், 3 பேர் வந்த வாகனத்தை பார்த்து நிறுத்துமாறு கூறி, மாரிக்கண்ணுவின் தலையில் லத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. 
இதனால், நிலைதடுமாறி கீழே விழுந்த மாரிக்கண்ணுவின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
இதுதொடர்பாக செய்தித்தாள்களில் வெளியான செய்தி அடிப்படையில் வழக்கை தாமாகவே விசாரணைக்கு எடுத்த மாநில மனித உரிமைகள் ஆணைய நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ், ராமநாதபுரம் எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

credit ns7.tv