ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

தமிழ்நாடு முழுவதும் கோவில் நிலம், நிதியில் அறநிலையத் துறை கட்டிடங்கள்: நீதிமன்றத்தில் ஒப்புதல்

 

Thiruvalluvar and Mahatma Gandhi images in court Madras high court
சென்னை ஐகோர்ட்

இந்து சமய அறநிலையத் துறை (HR&CE) மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் அதன் பிராந்திய இணை ஆணையர்கள் / உதவி ஆணையர்களுக்கு ( Joint Commissioners / Assistant Commissioners) அலுவலகங்கள் கட்டியிருப்பதாக ஒப்புக்கொண்டது. மேலும், கட்டுமானப் பணிகளுக்காக எடுக்கப்பட்ட தொகையும் அரசு நிதியில் இருந்து சம்பந்தப்பட்ட கோயில்களுக்கு திருப்பித் தரப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்தது.

பொது நல வழக்குரைஞர் டி.ஆர் ரமேஷ் மயிலாடுதுறையில் உள்ள இணை ஆணையர், உதவி ஆணையர் அலுவலகங்கள் சித்தர்காடு சம்பந்தசுவாமி கோவில் நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறி மனுத் தாக்கல் செய்தார். மேலும், நிலத்திற்கான மாத வாடகை 2013 முதல் 2016 வரை ரூ.2,000 ஆகவும், அதன்பிறகு ரூ.3,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது என்று கூறினார்.

கட்டுமானச் செலவு- ரூ.98 லட்சம்

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன் மற்றும் பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மயிலாடுதுறையில் உள்ள இணை ஆணையர், உதவி ஆணையர் அலுவலகங்கள் சித்தர்காடு சம்பந்தசுவாமி கோவில் நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை ஒப்புக் கொண்டது.

மேலும், பிப்ரவரி 28, 2023 வரையிலான வாடகை பாக்கி ரூ. 2.82 லட்சம் அரசு பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் இருந்து கோயிலுக்கு செலுத்தப்பட்டதாகவும் தெரிவித்தது. தொடர்ந்து, கட்டடம் கட்ட எடுக்கப்பட்ட தொகை நிர்வாக நிதி அல்லது அரசு நிதியில் இருந்து சம்பந்தப்பட்ட கோவிலுக்கு திருப்பி அளிக்கப்படும். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் நிலத்திலும் ஜே.சி/ஏ.சி அலுவலகங்கள் கட்டப்பட்டதாக கூறியது.

கட்டடம் கட்ட தேவையான செலவு ரூ.98 லட்சம் ஆரம்பத்தில் 5 வெவ்வேறு கோயில்களில் இருந்து எடுக்கப்பட்டது. கூடுதலாக ₹75 லட்சம் மூன்று வெவ்வேறு கோவில்களில் இருந்து எடுக்கப்பட்டது. ₹20 லட்சம் ஒரு கோயில் நிதியில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறியது. கட்டுமானப் பணிகளுக்காக எடுக்கப்பட்ட மொத்தத் தொகையும் அரசு நிதியில் இருந்து மேற்கண்ட கோயில்களுக்குத் திருப்பிச் செலுத்தப்படும். நிலத்திற்கான நியாயமான வாடகையும் நிர்ணயம் செய்யப்பட்டு, அரசு நிதியில் இருந்து செலுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.

திருச்சி, திருச்செந்தூர் கோயில்

இதேபோல், திருச்சியில் உள்ள ஜே.சி மற்றும் ஏ.சி அலுவலகங்கள் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டு, 10 கோவில்களில் இருந்து கட்டுமான செலவு எடுக்கப்பட்டது. “அவ்வாறு ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகையும் அரசாங்க நிதியில் இருந்து இந்தக் கோயிலுக்குச் செலுத்தப்படும்,” எனத் துறை கூறியதுடன், 2017-ம் ஆண்டு முதல் நிலத்திற்கான நியாயமான மாத வாடகையாக ₹19,380 செலுத்துவதாக உறுதியளித்தது.

சேலம் ஜே.சி., அலுவலகம் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான மண்டபத்தில் இயங்கி வந்தது, டிசம்பர் 2004 முதல் ஜூன் 2019 வரையிலான மாத வாடகை ₹8,000 ஏற்கனவே அரசின் பட்ஜெட் ஒதுக்கீட்டில் இருந்து எடுக்கப்பட்டு கோயிலுக்கு செலுத்தப்பட்டது. அதற்கான நியாயமான வாடகை ஜூலை 1, 2019 முதல் ₹17,730 ஆக நிர்ணயிக்கப்பட்டது, அதுவும் பிப்ரவரி 2023 வரை செலுத்தப்பட்டது. கோயிலுக்கு இதுவரை செலுத்தப்பட்ட மொத்தத் தொகை ₹21.80 லட்சம் என்று அறநிலையத் துறை விளக்கம் அளித்தது.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ள திருநெல்வேலி இணை ஆணையர் அலுவலகம் தொடர்பாக, பொதுப் பணித் துறையினர் வாடகையாக ₹6,130 நிர்ணயித்துள்ளதாகவும், 1989 முதல் 2011 வரை செலுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. நவம்பர் 1, 2001 முதல் ஜூன் 30, 2022 வரையிலான வாடகை எடுக்கப்பட்டு கோயிலுக்கு விரைவில் வழங்கப்படும், ”என்று மேலும் கூறப்பட்டது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/hrce-concedes-it-constructed-its-offices-on-temple-lands-747905/