புதன், 6 செப்டம்பர், 2023

கட்சியை அழித்து ஒழிப்பது தமிழகத்திற்கு நல்லது: சுப. உதயகுமாரன்

 SP Udhayakumaran

சுப. உதயகுமாரன்

அணு உலை எதிர்ப்பு போராளியும் பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவருமான சுப. உதயகுமாரன், பாசிச பா.ஜ.க-வோடுச் சேர்த்து நாடக நா.த.க-வையும் , அழித்தொழிப்பதுதான் தமிழ்நாட்டிற்கு நல்லது என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுப. உதயகுமாரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது

“அன்று:

"இலை மலர்ந்தால் ஈழம் மலரும்!'

(அதிமுக-வுக்கு பயந்து)

இன்று;

"திமுகவை ஆதரிக்கத் தயார்!"

(திமுக-வுக்கு பயந்து)

மண்டியிடாத மானம்,

வீழ்ந்துவிடாத வீரம்?

கடந்த சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட எனது அருமை நண்பர்கள், ம.ம.க வேட்பாளர் தோழர் அப்துல் சமது அவர்களுக்கும், த.வா.க. வேட்பாளர் தோழர் வேல்முருகன் அவர்களுக்கும் நான் தேர்தல் பரப்புரை செய்தபோது, நாதக தம்பிகள் சிலர் கொதிதெழுந்தார்கள். 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் "திருமிகு கனிமொழி அவர்கள் எனக்குப் பிடித்த வேட்பாளர்களுள் ஒருவர்" என்று குறிப்பிட்ட ஒரே காரணத்துக்காக அவரையும், என்னையும் இணைத்து மிக மிகக் கொச்சையாக, அசிங்கமாகப் பேசினார்கள் இவர்கள்.

இப்போது எங்கேப் போய் ஒளிந்துகொள்ளப் போகிறீர்கள் தம்பிகளே?

இந்த "ஓம் தமிழர் கட்சி" ஒரு சந்தர்ப்பவாத, பிழைப்புவாத, தன்னலவாதத் தலைவனின் ரசிகர் கூட்டம்.

பாசிச பா.ஜ.க-வோடுச் சேர்த்து நாடக நா.த.க-வையும் , அழித்தொழிப்பதுதான் தமிழ்நாட்டிற்கு நல்லது.

நாதக-வின் "பங்காளிகள், அண்ணன் தம்பிகள்" என்று சீமான் அவர்கள் உறவு கொண்டாடும் திராவிடக் கட்சிகளை அடுத்ததாகப் பார்த்துக்கொள்ளலாம்.” என்று தெரிவித்துள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/sp-udayakumaran-says-it-is-good-for-tamil-nadu-to-destroy-naam-tamilar-katchi-along-with-fascist-bjp

Related Posts: