செவ்வாய், 31 அக்டோபர், 2023

ஆளுநர் க்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

 தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காகத் தாக்கல்...

மாநிலங்களை ஒழிக்க நினைக்கிறது

 முதலமைச்சராக இருந்தபோது மாநில உரிமை பற்றி பேசிய மோடி, பிரதமரான பின் மாநில உரிமைகளை பறிக்கிறார் என்று முதல்.வர் ஸ்டாலின் பேசி உள்ளார்.ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா பாட்காஸ்டில் 3வது ஆடியோ இன்று வெளியானது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பேசியதாவது: ”இந்தியா என்பது கூட்டாட்சி தன்மை கொண்ட நாடு. பல்வேறு அழகிய மலர்கள் நிறைந்த அற்புதமான  பூந்தோட்டம். அதை சிதைக்க...

திங்கள், 30 அக்டோபர், 2023

விஷம் உள்ளவர்கள், விஷத்தை தான் கக்குவார்கள்!” மத்திய அமைச்சர் கருத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம்!

 கேரள குண்டு வெடிப்பில் ஹமாஸ் அமைப்பை இணைத்து பேசிய மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும்...

விவசாயிகள் மகிழ்ந்தால் நாடே மகிழ்ச்சியாக இருக்கும்: ராகுல் காந்தி

 விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தால் நாடே மகிழ்ச்சியாக இருக்கும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.சத்தீஸ்கா் சட்டப்பேரவைத் தோ்தல் நவம்பர்  7,  நவம்பர் 17-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.  இதையொட்டி அங்கு அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில், அந்த மாநிலத் தலைநகா் ராய்பூா் அருகே உள்ள கதியா கிராமத்துக்கு...

ஒரு காலத்தில், இந்தியா, இலங்கையை நெருக்கமாக்கிய ரயில் சேவை

 ஒரு காலத்தில், இந்தியா, இலங்கையை நெருக்கமாக்கிய ரயில் சேவைஇந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் புதிய படகு, எச்.எஸ்.சி செரியபாணியின் திறப்பு விழா, தனுஷ்கோடி வழியாக மெட்ராஸ் மற்றும் கொழும்பை இணைக்கும் பழைய போட் மெயில், விரைவு ரயில் மற்றும் படகு சேவையின் நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தது. போட் மெயிலின் கலாச்சார மரபு மற்றும் புதிய படகு சேவையின் பொருளாதார மற்றும் அரசியல் முக்கியத்துவத்தை...

ஆந்திராவில் 2 ரயில்கள் மோதி விபத்து: 19 பேர் உயிரிழப்பு

 தற்போது பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் உள்ளூர் நிர்வாகி அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.ஆந்திராவில் இரு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 19 பயணிகள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் “விசாகப்பட்டினம்-பலாசா பயணிகள் ரயில் மற்றும் விசாகப்பட்டினம் ராயகுடா பயணிகள் ரயில்” சிக்கியதாக தென்னக கடற்கரை ரயில்வே மண்டல அதிகாரி...

ஞாயிறு, 29 அக்டோபர், 2023

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: காஸாவில் இதுவரை 8,000 பேர் பலி!

 இஸ்ரேல் தாக்குதலால் காஸாவில் இதுவரை 8 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக காஸா சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் – குழந்தைகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.அக்டோபர் 7 அன்று,  ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிய எல்லையைக் கடந்து பேரழிவைச் செய்தனர்.  இதில் சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய குடிமக்கள் காயமடைந்தனர். ஹமாஸ்...

இஸ்லாமியர்கள் குறித்து டிரம்ப் சர்ச்சை பேச்சு: வெள்ளை மாளிகை கண்டனம்!

 அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு உடனடியாக வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்தது.குடியரசுக் கட்சி யூதக் கூட்டணியின் வருடாந்திர உச்சிமாநாட்டு நேற்று நடைபெற்றது. இதில் பேசிய டிரம்ப் இஸ்லாமியர்களுக்கான பயணத்தடையை மீண்டும் கொண்டுவருவேன் என்று சர்ச்சைக்குரிய வகையில்...

மணிப்பூர் மோதல் தொடங்கி 6 மாதங்கள்: திருடப்பட்ட ஆயுதங்களில் 25% மட்டுமே மீட்பு

 மணிப்பூரில் வன்முறை வெடித்து கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், மே மாதம் வன்முறையின் உச்சக்கட்டத்தின் போது கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களில் கால் பகுதியும், 5 சதவீதத்திற்கும் குறைவான வெடிமருந்துகளையும் மட்டுமே மாநில அரசாங்கத்தால் தற்போது வரை மீட்க முடிந்தது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கண்டறிந்துள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 5,600 ஆயுதங்களில், தோராயமாக 1,500...

கேரளா: கிறிஸ்தவ கூட்டரங்களில் குண்டுவெடிப்பு; பெண் உயிரிழப்பு, 25 பேர் காயம்

 சம்பவ பகுதியில் தீவிரவாத தடுப்பு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.கேரள மாநிலம் கொச்சி களமசேரியில் உள்ள யெகோவா விட்னஸ் ஸம்ரா கிறிஸ்தவ கூட்டரங்கில் இன்று காலை ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை நடந்துகொண்டிருந்தது.அப்போது பலத்த சப்தத்துடன் குண்டு ஒன்று வெடித்தது.தொடர்ந்து, அந்த இடமே சிதறி தீப்பற்றி எரிந்தது. மேலும், இரண்டு குண்டுகள் வரை வெடித்த சப்தம் கேட்டதாக பிரார்த்தனையில்...

தள்ளிப்போகும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு விழா: பொங்கலுக்குள் திறக்கப்படுமா?

 கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இணைப்பு சாலைகள், மழை நீர் வடிகால் பணிகளை நவம்பர் 15-க்குள் முடித்து ஒப்படைக்க, ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.  போக்குவரத்து நெரிசலை சென்னையில் குறைப்பதற்காக, கிளாம்பாக்கத்தில், 40 ஏக்கர் நிலத்தில் ரூ. 400 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான...

பிரதமர் ஆகும் ஆசை உள்ளதா? கேள்விக்கு எதிர்பார்க்காத பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின்

 முதலமைச்சர் ஸ்டாலினிடம் பிரதமர் ஆகும் எண்ணம் இருக்கிறா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு  முக்கியமான பதிலை அவர் வழங்கி உள்ளார்.தனியார் செய்தி நிறுவனத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின்  அளித்துள்ள பேட்டியில் அவரிடம் முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்துள்ளார். தமிழகத்தில் பல்வேறு  நல திட்டங்களை செயல்படுத்தி வருவதால் மாநில  அரசுகளுக்கு...

சனி, 28 அக்டோபர், 2023

வாராந்திர கேள்வி பதில் - 13.09.2023

இஸ்லாம் சார்ந்த வாராந்திர கேள்வி பதில் - 25.10.2023 பதிலளிப்பவர் : ஏ. அபூபக்கர் M.I.Sc குனூத் நாஸிலா எவ்வாறு செய்ய வேண்டும்? விளக்கம் தரவும் ஆலு இம்ரான் அத்தியாயத்தின் 108வது வசனம் அருளப்பட்டதின் பின்னணி என்ன? ஆன்லைனில் விளம்பரங்களை பார்ப்பதன் மூலமாக வருமானம் ஈட்டுகின்றனர் இது இஸ்லாத்தில் கூடுமா? ஆடையில் ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ சிறுநீர் கழித்தால் சுத்தம் செய்யும் சட்டம் எந்த வயது வரை பொருந்தும்? மருத்துவ காப்பீடுக்காக நாம் செலுத்தும்...

75,00,00,00,00,000 கோடி ஊழல்!!தண்டிக்கப்படும் அதிகாரிகள்

பாஜக வின் 75,00,00,00,00,000 கோடி ஊழல்!!தண்டிக்கப்படும் அதிகாரிகள் சையத் முஹம்மது - மாநிலச்செயலாளர், TNTJ செய்தியும் சிந்தனையும் - 20.10.2023 ...

இந்திய பாலஸ்தீன உறவு ? ஏமாற்றுகிறதா அரசு ?

இந்திய பாலஸ்தீன உறவு ? ஏமாற்றுகிறதா அரசு ? உரை: S.முஹம்மது யாஸிர் மாநிலச் செயலாளர்,TNTJ செய்தியும் சிந்தனையும் 24.10.2023 ...

BPO - EPUBLISHING , துறையில் வேலைவாய்ப்புகள்

BPO - EPUBLISHING , துறையில் வேலைவாய்ப்புகள் A. முஹம்மது இப்ராஹிம் B.E. கல்விச் சிந்தனைகள் - 25.10.2023 ...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது கல்வீச்சு தாக்குதல் ஏன்?-வெளியான அதிர்ச்சி தகவல்!

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் கல்வீச்சு சம்பவத்தில் 4 பேரைபோலீசார் கைது செய்தனர்.  கம்பளி பூச்சி பிரச்சினையால், கற்களை வீசியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.சென்னை தியாகராய நகர் செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அலுவலகத்தின் வளாகத்திற்குள்...