சனி, 21 அக்டோபர், 2023

அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு எதிராக போராடிய யூதர்கள் - நாடாளுமன்றம் முன் திரண்டது ஏன்?

 

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் நடத்திய யூத அமைப்புக்களைச் சேர்ந்த 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைதுகள் தொடர்வதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும், காவல்துறை அதிகாரி ஒருவரைத் தாக்கியதாக 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

நாடாளுமன்ற பகுதியில் போராட்டங்கள் நடத்த அனுமதி இல்லாத நிலையில், அங்குள்ள நாடாளுமன்ற அலுவலக கட்டடமான "கேனான் ஹவுஸ்" அலுவலக கட்டிடத்திற்குள் நுழைந்த பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த போராட்டக்காரர்கள் காஸாவில் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், நாடாளுமன்றமும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

வாஷிங்டனில் நடந்த பேரணி, இரண்டு இடதுசாரி யூத அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இரண்டு அமைப்புகளும் இஸ்ரேலுக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றன.

ஒரு பெரிய போராட்டக் குழுவினர் பேரணி நடத்தியதாகத் தெரிவித்த போலீசார், நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள தெருக்களை புதன்கிழமையன்று மூடிவிட்டனர்.

source https://www.bbc.com/tamil/articles/crg11ww2lq3o?fbclid=IwAR33uZ-qm9qd2DyhHnMR9dGGXWwRHCvN4DRpkV-DTu09WyW3EgegPc8jplk