13 10 2023
பாலஸ்தீன நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதலைப் பயங்கரவாத தாக்குதல் என கூறி தமுமுக சார்பில் பழைய வண்ணாரப்பேட்டை மணிக்கூண்டு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாலஸ்தீன நாட்டின் மீது இஸ்ரேல் ராணுவமானது தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த தாக்குதலைப் பயங்கரவாத தாக்குதல் என கூறி தமுமுக சார்பில் பழைய வண்ணாரப்பேட்டை மணிக்கூண்டு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;
இதில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையின் அக்கட்சியின்
தலைவர் ஜவஹிருல்லா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜவஹிருல்லா, பாலஸ்தீனத்தை 6%இஸ்ரேல் ஆக்கிரமித்து தற்போது 94%ஆக்கிரமித்துத் தாக்குதலை நடத்தி வருகிறது. சமீபத்தில் காஸா பகுதிக்கு எந்தவித உணவும் போகாதவாறு இஸ்ரேல் தடை செய்துள்ளது அப்பாவி குழந்தைகள் பெண்கள் பொதுமக்கள் என இஸ்ரேல் கொலை செய்து வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து காந்திய தேசத்திற்கு அவமானம் செய்யக் கூடிய செயலை பிரதமர் செய்துவிட்டார் எனவும் பேசினார்.
source https://news7tamil.live/a-protest-on-behalf-of-dmk-party-condemning-the-attack-by-israel.html