ஞாயிறு, 29 அக்டோபர், 2023

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: காஸாவில் இதுவரை 8,000 பேர் பலி!

 

இஸ்ரேல் தாக்குதலால் காஸாவில் இதுவரை 8 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக காஸா சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் – குழந்தைகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அக்டோபர் 7 அன்று,  ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிய எல்லையைக் கடந்து பேரழிவைச் செய்தனர்.  இதில் சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய குடிமக்கள் காயமடைந்தனர். ஹமாஸ் இஸ்ரேலிய பிரதேசத்தை தாக்கி 229 பேரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளது.

3 வாரங்களைக் கடந்து நீடித்துவரும் இப்போரில் இஸ்ரேல் படையினர் காஸா எல்லைக்குள் தரை வழியாக நுழைந்துள்ளனர். வான் வழி, கடல் வழி தாக்குதல்களைத் தொடர்ந்து தரை வழியாக நடத்தப்படும் இந்தத் தாக்குதலை இஸ்ரேல் – ஹமாஸ் போரின் 2ம் கட்டம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

தரை மார்க்கமாக நுழைந்து காஸா பரப்புக்கு மேலேயும், காஸா பதுக்குக் குழிக்குள்ளும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இந்தப் போர் நீடிக்கும் சூழலே இருப்பதாகவும் நெதன்யாகு தெரிவிக்கிறார்.

இந்நிலையில், காஸாவில் மட்டும் 7,703 பேர் வரை இறந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகமானோர் பெண்கள், குழந்தைகள். காஸாவில் நிலைமை மோசமடைந்து வருகிறது எனக் குறிப்பிட்டார்.

source https://news7tamil.live/israel-hamas-war-8000-people-have-died-in-gaza-so-far.html