சனி, 21 அக்டோபர், 2023

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் – அரபிக் கடலில் புயலுக்கு வாய்ப்பு..!

 

 காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று அரபிக் கடலில் புயலுக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக் கடலில் மையம்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று காலை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று நள்ளிரவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவியது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று காலை  வலுப்பெற்று, அதே பகுதியில் நிலவியது.  இந்த நிலையில் தற்போது இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு அரபிக்கடலில் அடுத்த 12 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும்.  இந்த புயலுக்கு தேஜ் என இந்தியா பரிந்துரைத்த பெயர் சூட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


source https://news7tamil.live/strengthened-low-pressure-zone-possibility-of-storm-in-the-arabian-sea.html

Related Posts: