ஞாயிறு, 22 அக்டோபர், 2023

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

 puyal

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை  கூண்டு ஏற்ற வானிலை  ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு  அரபிக்கடல் பகுதிகளில்,  கடந்த 19ம் தேதி காலை நிலவிய  காற்றழுத்த  தாழ்வு பகுதி, அன்று இரவில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு  அரபிக்கடல்  பகுதிகளில் நிலவியது. இது மேற்கு வடமேற்கு திசையில், நகர்ந்து, தென்மேற்கு அரபி கடல் பகுதிகளில் புயலாக  உருவெடுத்தது.  தென்மேற்கு அரபி கடலில் உருவாகி உள்ள  இந்த புயலுக்கு  தேஜ் என பெயரிடப்பட்டது .

இந்நிலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் தேஜ் அதிதீவிர புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு அரபி கடலில், சகோத்ரா நகருக்கு 330 கி.மீ. கிழக்கு – தென்கிக்கேயும், சலாலா நகருக்கு 690 கி.மீ தெற்கு – தென்கிழக்கேயும் மற்றும் அல் கைடா  நகருக்கு 720 கி.மீ தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் புயல் அதிக வலுப்பெறும். இன்று மதியம் புயல் இன்றும் அதிக வலுப்பெற கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் வங்கக் கடலில் புயல் உருவானதை குறிக்கும் வகையில் சென்னை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர்  காட்டுப்பள்ளி, நாகை, புதுச்சேரி,  காரைக்கால், பாம்பன் ஆகிய 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  


source https://tamil.indianexpress.com/tamilnadu/9-harbor-cyclone-warning-tamilnadu-1566488