ஞாயிறு, 22 அக்டோபர், 2023

மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது ” -விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி!

 

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது அதுவே விசிக-வின் சபதம் என  திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார். 

2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக, வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பட்டறை இன்று சென்னை, நந்தனம், ஓய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். மேலும், இதில் கூட்டணி கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய திருமாவளவன்:

இது ஒரு வரலாற்று நிகழ்வு இது நம் வரலாற்றில் ஒரு மைல் கல். இந்த இயக்கம் 10 ஆண்டுகள் தேர்தலைப் புறக்கணித்தது 1999 ஆண்டு தான் முதலில் தேர்தலைச் சந்தித்தது 2002 இல் தான் நம் கட்சியை பதிவு செய்தோம். தேர்தலின் அடிப்படையைப் புரிந்து கொள்வதற்கு எனக்கே 21 ஆண்டுகள் தேவைப் பட்டுள்ளது. தேர்தலை நான் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. வென்றாலும் தோற்றாலும் இலகுவாக எடுத்துக் கொள்வோம். அச்சம் பீதியிலிருந்து மக்களை மீட்க வேண்டும். இதுவே குறிக்கோளாக இருந்தது.ஒரு சமூக இயக்கமாக இருந்து கொண்டு அரசியலில் வெற்றி பெற முடியாது

பிறப்பின் அடிப்படையில் மக்களிடம் உயர்வு தாழ்வு பார்ப்பது தான் சனாதனம். இது வேறு எந்த மதத்திலும் கிடையாது. தீட்டு கொள்கை வேறு எந்த மதத்திலும் கிடையாது. பிராமினர்களில் கூட வைணவர் சைவம் என்று பாகுபாடு பார்ப்பது அனைத்தும் சனதாணம்.

இந்தியக் கூட்டணியின் வெற்றிக்கு விசிக முழுமையாக உழைப்போம். திருமாவளவன் வெற்றி பெற்று விட்டால் போதும் என்று இருக்கக் கூடாது 40 தொகுதியிலும் நமது கூட்டணிக் கட்சிகளை வெற்றி பெறுவதற்கு உழைக்க வேண்டும் அதற்குத் தான் இந்த கூட்டம் . மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர கூடாது அதுவே நமது ( விசிக) வின் சபதம்.

இந்தியாவை இந்துக்களின் நாடு என்று பிரகடனப்படுத்த வேண்டும் அதுவே பாஜகவின் நோக்கம். ஆனால் அதற்கு தடைக்கல்லாக இருப்பது அம்பேத்கரின் அரசியல் அமைப்பு சட்டம் தான். கம்யூனிஸ்ட், காங்கிரஸ்,திமுக என அனைத்து கட்சிகளின் குரலும் அம்பேத்கரின் குரலாக இருக்கிறது; மொழிகள் மாறினாலும் கருத்து ஒன்று தான்

நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய கூட்டணியின் வெற்றிக்கு முழுமையாக உழைக்க வேண்டும். 40 தொகுதியிலும் நமது கூட்டணி கட்சிகளை வெற்றி பெற வைக்க வேண்டும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது அதுவே விசிக-வின் சபதம் என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி பேசினார்.


source https://news7tamil.live/bjp-should-not-come-back-to-power-vishika-leader-thirumavalavan-mp.html