காசா பகுதியில் தரைவழித் தாக்குதலுக்குத் தொடர்ந்து தயாராகி வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (ஐடிஎஃப்) தெரிவித்துள்ளது.
அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடங்கியதில் இருந்து காசா பகுதியில் நடந்த சண்டையில் 1,756 குழந்தைகள் உட்பட குறைந்தது 4,385 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் 13,561 பேர் காயமடைந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த புள்ளிவிவரங்களை சரியாக உறுதிப்படுத்த முடியவில்லை. அக்டோபர் 7ம் தேதி நடந்த பயங்கர தாக்குதலில் 1,400 பேர் கொல்லப்பட்டு 210 பேரைக் கைப்பற்றிய பின்னர், சுமார் 1,500 ஹமாஸ் போராளிகளைக் கொன்றதாக இஸ்ரேல் கூறுகிறது என்று தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஒரு பெரிய தரைவழித் தாக்குதலுக்கு முன்னதாக IDF ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை காசா எல்லைக்கு அனுப்பியுள்ளது என்று தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
source https://news7tamil.live/gaza-israel-continues-to-prepare-for-ground-attack-fear-of-rising-death-toll.html