கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வருமான வரித்துறை சோதனையில் வீட்டில் இருந்து எந்த பொருட்களும் கைபற்றப்படவில்லை.
15 04 2024
கோவை சிவானந்தா காலனி பகுதியில் உள்ள தி.மு.க நிர்வாகியும் மாநகராட்சி மத்திய மண்டல தலைவருமான மீனா லோகு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 3 கார்களில் வந்த 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீனா லோகு இல்லத்தில் சோதனை நடத்தினர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் சோதனை நடத்திய நிலையில் வீட்டில் இருந்து எந்த பொருட்களும் கைபற்றப்பட வில்லை. வீட்டில் இருந்த கார், அலுவலகம், வீடு என அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. சோதனை நடத்திய நிலையில் வீட்டில் இருந்து எந்த பொருட்களும் கைபற்றப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/income-tax-raid-at-kovai-dmk-executive-who-president-of-corporation-central-region-4483814