சனி, 13 ஏப்ரல், 2024

வேலையில்லா திண்டாட்டம், கல்வி, மருத்துவ வசதி குறித்தெல்லாம் பிரதமர் பேசுவதே இல்லை

 வேலையில்லா திண்டாட்டம், கல்வி, மருத்துவ வசதி குறித்தெல்லாம் பிரதமர் மோடி பரப்புரையில் பேசுவதே இல்லை என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சனம் செய்துள்ளார்.

பரப்புரைக்காக ஹெலிகாப்டரில் செல்லும் போது வறுத்த மீன் சாப்பிடும் வீடியோவை பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வெளியிட்டார். இதற்கு பாஜக தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர். பின்னர் மீண்டும் ஆரஞ்சு பழ வீடியோவை வெளியிட்டார் தேஜஸ்வி யாதவ்.  தேஜஸ்வீயின் பதிவுகளுக்கு பாஜகவினர் தொடர்ந்து எதிர்வினையாற்றி வந்த நிலையில், வேலையில்லா திண்டாட்டம், கல்வி, மருத்துவ வசதி குறித்தெல்லாம் பிரதமர் மோடி பரப்புரையில் பேசுவதே இல்லை என்று தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தேஜஸ்வி யாதவ் கூறியாதவது:

பீகார் மாநிலத்தின் வளர்ச்சிக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகள் பற்றியே மோடி பேசுவதாகவும், பாஜவில் சேர்ந்தவர்கள் மீதான வழக்குகள் எல்லாம் மூடப்பட்டு விடுவதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் பீகாருக்கு என்ன செய்வேன் என்று மோடி கூறுவாரா என்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி கேள்வி எழுப்பியுள்ளார்.



source https://news7tamil.live/prime-minister-modi-does-not-talk-about-unemployment-education-medical-facilities-review-by-tejaswi-yadav.html

Related Posts: