வெள்ளி, 2 அக்டோபர், 2015

இந்திய இராணுவத்தின் உண்மை முகம்!

கஷ்மீர் கற்பழிப்புகள், படுகொலைகள் – வெளிச்சத்திற்கு வரும் இந்திய இராணுவத்தின் உண்மை முகம்!
September 11, 2015
ஸ்ரீநகர்: தகவலறியும் உரிமை சட்டம் மற்றும் நேரடி சாட்சியங்கள் ஆகியவற்றின் மூலம் திரட்டப்பட்ட தகவல்கள் “வன்முறையின் அமைப்புகள்: ஜம்மு கஷ்மீரில் இந்திய அரசு” என்ற அறிக்கையாக உருவெடுத்துள்ளது.
இந்த அறிக்கை, சித்திரவதைகள், பாலியல் பலாத்காரங்கள், சட்டவிரோதக் கொலைகள், ஆட்கள் காணாமல் போவது பற்றிய 333 சம்பவங்களை அடிக்கோடிட்டுள்ளது. இதில் ஜம்மு-கஷ்மீர் மாகாணத்தில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் நேரடியாக ஈடுபட்டுள்ள குற்றங்கள் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 25 ஆண்டுகளாக ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் அப்பாவி மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 464 இராணுவ மற்றும் போலீஸ் படையினர், துணை இராணுவப் படையினர், அரசு ஆயுதப் படையினர் ஆகியோர் ‘வன்முறைகளின் முகவர்களாக’ இந்த அறிக்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஒரு மேஜர் ஜெனரல், 7 பிரிகேடியர்கள், 31 கலோனல்கள், 4 லெஃப்டினண்ட் கலோனல்கள், 115 மேஜர்கள், 40 கேப்டன்கள், துணை இராணுவப் படையைச் சேர்ந்த 54 மூத்த அதிகாரிகளின் பெயர்களை பட்டியலிட்டுள்ளது இந்த அறிக்கை.
ஸ்ரீநகரில் இந்த அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
“ஜம்மு-கஷ்மீரில் உள்ள படைகளின் எண்ணிக்கை தோராயமாக 7,50,981 ஆக இருக்கலாம்” என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜம்முவில் பாதுகாப்புப் படையினரின் வன்முறைகளின் விதங்கள் மற்றும் அளவு பற்றி இந்த அறிக்கையில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியிடப்படும் என்று தெரிகிறது.