பிரிவு 20.,
அ. ஒரு குற்றமென குற்றம் சாட்டப்பட்ட செயல் செய்யப்பட்ட காலத்தில் நடைமுறையில் இருந்த சட்டத்தினை மீறிய குற்றத்தைத் தவிர வேறு எந்த குற்றத்திற்காகவும் ஒரு நபர் தண்டிக்கப்படக்கூடாது.
ஆ. எந்த நபரும் ஒரே குற்றத்திற்கு ஒரு முறைக்குமேல் குற்ற வழக்கு தொடுக்கப்பட்டு தண்டிக்கப்படக்கூடாது.
இ. எந்த நபரையும் அவருக்கு எதிரான வழக்கில் ஓர் சாட்சியாய் அவரை இருக்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது.,