நாங்கள் உருவாக்கும் தீவிரவாதிகளை அழிக்காதீர்கள் சவூதி அரசுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
சவுதி அரேபியாவின் நடவடிக்கையால் மதத்தின் பெயராலான பதற்றம் மேலும் அதிகரிக்கும் அமெரிக்கா எச்சரிக்கை
வாஷிங்டன்,சவுதி அரேபியாவின் நடவடிக்கையால் மதத்தின் பெயராலான பதற்றம் மேலும் அதிகரிக்கும் என்று அமெரிக்கா எச்சரித்து உள்ளது. சவுதி அரேபியாவில் ஷியா பிரிவு மதத் தலைவர் நிமர்-அல்-நிமர் உள்பட 47 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றியது. சவுதி அரேபிய அரசுக்கு எதிரான சிறுபான்மை ஷியா பிரிவினரின் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திய நிமர் அல் நிமர் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தி, மரண தண்டனை விதித்து நிறைவேற்றி இருப்பது, உலகமெங்கும் உள்ள ஷியா பிரிவினருக்கு ஆத்திரத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஷியா பிரிவினரை பெரும்பான்மையாக கொண்டுள்ள ஈரானும், ஈராக்கும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றி இருப்பதால் சவுதி அரேபியா கடும் விலை கொடுக்க வேண்டி வரும் என ஈரான் எச்சரித்துள்ளது.சவுதி அரேபியாவுக்கு எதிராக அங்கு போராட்டம் வெடித்துள்ளது. தலைநகர் டெஹ்ரானில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தின் முன்பாக நூற்றுக்கணக்கானோர் கூடி, போராட்டம் நடத்தினர். அப்போது வன்முறை வெடித்தது. தூதரகத்தின் மீது நாட்டு வெடிகுண்டுகளும், பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன. தூதரகம் தீ வைத்து எரிக்கப்பட்டது.
தாக்குதல் நடத்தப்பட்ட போது தூதரகத்தில் அதிகாரிகளோ, ஊழியர்களோ இல்லை என்பதால் அவர்கள் தப்பித்தனர். ஈரானின் 2-வது பெரிய நகரமான மஷாத் நகரிலும் சவுதி அரேபிய துணைத்தூதரகத்துக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதற்கிடையே நிமர் அல் நிமரின் மரண தண்டனையால், சவுதி அரேபியா இறைவனால் பழிவாங்கப்படும் என ஈரான் மதத்தலைவர் அயதுல்லா அலி காமேனி எச்சரித்துள்ளார். கண்டனத்தை பதிவு செய்வதற்காக டெஹ்ரானில் உள்ள சவுதி அரேபிய தூதருக்கு ஈரான் அரசு அழைப்பு விடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் சவுதி அரேபியா 47 பேரின் மரண தண்டனையை நிறைவேற்றியதற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனும் கண்டனம் தெரிவித்துள்ளார். மரண தண்டனைக்கு முடிவு கட்ட வேண்டும் என அவர் கூறி உள்ளார். சவுதி அரேபியாவின் நடவடிக்கையால் மத்திய கிழக்கு நாடுகளில் மதத்தின் பெயராலான பதற்றம் மேலும் அதிகரிக்கும் என்று அமெரிக்கா எச்சரித்து உள்ளது. அதே நேரத்தில் பதற்றத்தை தணிப்பதற்கான முயற்சியை இரு மடங்காக அதிகரிக்க வேண்டும் என அந்த நாடு, மத்திய கிழக்கு நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளது.