சனி, 16 ஜனவரி, 2016

சிங்கப்பூராக மாறிய டில்லி : கெஜ்ரிவால் பெருமிதம்..


.
புதுடில்லி : தலைநகர் டில்லியில் கடந்த இரண்டு வாரங்களாக இருந்த புதிய .போக்குவரத்து முறையால், டில்லி சிங்கப்பூராக மாறியுள்ளதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
தலைநகர் டில்லியில் காற்று மாசுபாட்டை குறைக்கவும் மற்றும் வாகன நெரிசலை தடுக்கும் பொருட்டு, ஒற்றை இலக்க வாகனப்பதிவு எண் கொண்ட வாகனங்கள் ஒருநாளிலும், இரட்டை இலக்க வாகனப்பதிவு எண்கள் கொண்ட வாகனங்கள் மற்றொரு நாளிலும், கடந்த ஜனவரி 1ம் தேதியிலிருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய போக்குவரத்து முறையின் காரணமாக, டில்லியில், காற்று மாசுபாடு பெருமளவு குறைந்திருப்பதாக அனைவரும் தெரிவித்துள்ள நிலையில், இந்த புதிய போக்குவரத்து முறையின் காலக்கெடு இன்றுடன் (ஜனவரி 15ம் தேதி) முடிவடைகிறது. இந்த முறையை நீட்டிக்க வேண்டும் என்று மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இந்த புதிய போக்குவரத்து முறை நிறைவு அடைவதையொட்டி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அங்கு அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது, புதிய போக்குவரத்து முறையின் பலனாக, டில்லியில் காற்று மாசுபாடு பெருமளவு குறைந்துள்ளது. இதன்காரணமாக, டில்லி, சிங்கப்பூராகவே மாறியுள்ளது. புதிய போக்குவரத்து முறைக்கு மக்கள் மகத்தான வரவேற்பு அளித்துள்ளனர். அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

Related Posts: