சனி, 16 ஜனவரி, 2016

இசுலாமிய தோழர்களை நான் புரிந்துக் கொண்டது போல் பலரும் புரிந்துக் கொள்ளும் வரை.

சுதந்திர இந்தியாவில் இசுலாமியர்கள் பட்ட அடிகள் கொஞ்சம் நஞ்சமல்ல தினம் தினம் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள் இன்று வரை.
இசுலாமிய தோழர்கள் படும் அவலங்களை இன்னொரு இசுலாமிய தோழர் கூறினால் அது பத்தோடு பதினொன்று அவ்வளவு தான் அதே உண்மையை நான் கூறினால் தனித்துவம் பெருவதோடு இசுலாமிய தோழர்களும் இந்து தோழர்களும் கிருத்துவ தோழர்களும் இலகுவாக புரிந்து கொள்கிறார்கள்.
இந்தியாவில் தவறேதும் செய்யாத இசுலாமிய தோழர்கள் மீது விழுந்த தீவிரவாத பயங்கரவாத முத்திரயை நான் துடைத்து எரிய என்னால் முடிந்தவரை முகப்புத்தகத்தின் வாயிலாக போராடுவேன்.
நான் குரான் வாசித்துக் கொண்டு இருக்கிறேன் இசுலாத்தில் குறையேதும் இல்லை இசுலாமியர்களிடம் குறை இருக்கிறது அதுவும் சரி செய்து விடக்கூடிய குறைகள் தான்.
இசுலாமிய தோழர்களை தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரித்த பங்கு சினிமாவுக்கு இருக்கிறது அதில் பெரும் பங்கு ஊடகங்களுக்கு இருக்கிறது ஊடகங்களின் மூலமே இசுலாமியர்களை தீவிரவாதிகளாக வெகுஜன மக்களுக்கு காட்டுவதற்கு பிரிவினைவாதிகளான இந்துத்துவா சிந்தணைவாதிகள் முயற்ச்சி செய்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்கள்.
ஊடகங்களுக்கு தெரியும் இசுலாமியர்கள் நல்லவர்கள் தவறு செய்யாதவர்கள் என்பது இருப்பினும் துவேச கருத்துகளை விதைத்து பிற மக்களிடம் இருந்து இசுலாமிய தோழர்களை பிரித்துக் காட்ட முயலுகிறார்கள்.
இன்னும் நிறைய எழுதுவேன் என் அன்புக்குரிய இசுலாமிய தோழர்களின் கலங்கத்தை போக்குவதற்காக எத்தனை தடைகள் வந்தாலும்.
இசுலாமிய தோழர்களை நான் புரிந்துக் கொண்டது போல் பலரும் புரிந்துக் கொள்ளும் வரை.
இசுலாமிய தோழர்களுக்கு நான் குரல் கொடுக்காமல் வேறு யார் குரல் கொடுப்பது.
என்றென்றும் மத நல்லிணக்கத்தை பெரிதும் விரும்பும்
செந்தில் பிரகாஷ்

Related Posts: