ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கெஜ்ரிவால் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடியை கடந்த ஆகஸ்ட் மாதம் சந்தித்துப் பேசியபோது, மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் நான் அமல் படுத்துவேன்; எனவே, எனது நிர்வாகப் பணிகளில் குறுக்கிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன்
ஆனால் மோடி அவ்வாறு நடந்து கொள்ளவில்லை; என்னுடன் அரசியல் ரீதியாக நேரடியாக மோது வதற்கு பதில் மறைமுகமாக மோதுகிறார்கள்” என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ”என்னை ஆட்சி நடத்தவிட்டாலே போதும், 2 நிமிடங்களில் டெல்லி அரசுக்கும், மத்திய அரசுக்கும் உள்ள கசப்புணர்வுகள் நீங்கிவிடும்; டெல்லி துணை நிலை ஆளுநரை அழைத்து மோடி உத்தரவிட்டாலே எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்;
அதைவிடுத்து எனக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போடு கிறார்கள். நான் ஒரு சிறு மாநிலத்தை ஆட்சி செய்கிறேன். பிரதமர் மோடியோ இந்த நாட்டையே ஆள்கிறார்.
அவர் ஏன் என்னை சுற்றிசுற்றி வந்து முட்டுக்கட்டை போடுகிறார் என்று தெரியவில்லை. இது கோழைத் தனமான அரசியல்.
மோடிக்கு துணிச்சல் இருந்தால் என் கண்ணை பார்த்து பேசட்டும் என்று கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.