சனி, 16 ஜனவரி, 2016

மாட்டிறைச்சி: மத்திய பிரதேசத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை

மாட்டிறைச்சி: மத்திய பிரதேசத்தில் முஸ்லிம் தம்பதியர் மீது ‘தாக்குதல்’

 

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் முஸ்லிம் தம்பதியர் மீது இந்து வலதுசாரி குழு ஒன்று தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் 7 பேரைக் கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தபோது, தங்களின் ரயில் பெட்டியில் நுழைந்த 15 முதல் 20 பேர் கொண்ட குழுவொன்று தங்களின் பொருட்களை சோதனையிடத் துவங்கியதாக அந்தத் தம்பதியினர் கூறுகின்றனர்.151007135218_india_to_test_illegal_cow_exports_amid_beef_controversy_512x288_reuters_nocredit

மாட்டிறைச்சி உணவு எதுவும் இருக்கின்றதா என்று அவர்கள் தேடியதாகக் கூறப்படுகின்றது.

அதற்கு உடன்பட தான் மறுத்தபோது, அந்த நபர்கள் தனது மனைவியைத் தாக்கியதாக கணவன் கூறுகின்றார்.

கடந்த ஆண்டு, வட-இந்தியாவில் மாட்டிறைச்சி உண்டதாகக் கூறி கடும்போக்கு இந்துத்துவா வாதக் கும்பலொன்று நடத்திய தாக்குதலில் முஸ்லிம் ஆண் ஒருவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts: