ஈரான் ஒரு நாளைக்கு 5 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்ய உத்தரவு !
துபை, 
ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்து பொருளாதார தடைகளையும் நீக்குவதாக அமெரிக்க அறிவித்தது. இதன் எதிரொலியாக, கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க ஈரான் முடிவு செய்துள்ளது. ஒரு நாளைக்கு 5 லட்சம் பேரல்கள் வரை கச்சா எண்ணெய்யை உற்பத்தியை அதிகரிக்க ஈரான் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை நேஷனல் ஈரானியன் ஆயில் கம்பெனியின் தலைவரும், ஈரான் நாட்டின் துணை எண்ணெய் மந்திரியுமான ராக்நெடின் ஜவாடி தெரிவித்துள்ளார். கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்ச எண்ணெய் சர்வதேச சந்தையில் சரிவை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது