Rohit Vemula 2015 ஆகஸ்ட் மாதம் எழுதிய பதிவு இது.
ABVP அமைப்பை சேர்ந்தவர்கள் அனைவரும் அந்த விடியோவை ஷேர் செய்கிறார்கள். அந்த விடியோவை அனைவரும் பார்க்க வேண்டும் என்று நானும் விரும்புகிறேன்.
அந்த விடியோவில் நீங்கள் பார்ப்பது என்னைத்தான். ABVP-ன் கேள்விகளுக்கு மிக பொறுமையாகத்தான் பதிலளிக்க வேண்டும் என்று முதலில் எண்ணினேன். ஆனால், அம்பேத்கரையும், அம்பேத்கர் அமைப்புகளையும் அவர்கள் தரக்குறைவாக பேசியது என்னை ஆத்திரமூட்டியது,அதன் காரணமாகவே அவர்களை பதிலுக்கு திட்டினேன்.
ஆனால்.... இந்த விடியோவின் முழு பதிவையும் வெளியிட வேண்டும் என்று ABVP அமைப்பினரை கேட்டுகொள்கிறேன். எந்த இடத்தில், "பல்கலை வளாகத்தில் எங்கு அம்பேத்கர் போஸ்டர்களை கண்டால் கிழித்து எறிவோம்" என்று சொன்னார்களோ... அந்த இடத்தில் இருந்து.
அதுவும் "வளாகத்தை விட்டு வெளியே வா. அம்பேத்கரிஸ்ட் என்றால் எவன் என்று பஜ்ரங் தல்" தெரிந்து கொள்ளட்டும் என்று எனக்கு மிரட்டம் விடுத்த இடத்தில் இருந்து.
இந்துத்துவத்தை திட்டுவதால் ஒரு போதும் நான் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக போவதில்லை. இதை தொடர்ந்து செய்வேன்.
#அந்த விடியோ முதல் காமன்ட்டில்.
.