வியாழன், 7 ஜனவரி, 2016

தமிழக ஆளுநராக பதவியேற்ற ரோசய்யா, எவ்வளவு செலவு செய்திருக்கிறார்

பாணபத்திர ஓணாண்டி's photo.

2011 ஆகஸ்டு மாதம் தமிழக ஆளுநராக பதவியேற்ற ரோசய்யா, இந்த நான்காண்டுகளில் எவ்வளவு செலவு செய்திருக்கிறார் என்ற விபரத்தை கோவை வழக்கறிஞர் திரு.லோகநாதன் தகவல் பெரும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றிருக்கிறார்.
அதன்படி:
💥156.14 ஏக்கர் பரப்பளவு கொண்ட கிண்டி ராஜ்பவன் வளாகம் ஆளுநர் அலுவலகம், வீடு, ஊழியர் அலுவலகங்கள், குடியிருப்புகள் உள்ளடக்கியது.இவற்றை பராமரிக்க, 1.27 கோடி.
💥2011 ஆகஸ்டு முதல் 2015 மே மாதம் முடிய மின் கட்டணம் 36.24 லட்சம்.
💥கடுமையான மின்வெட்டு காலத்திலும் மின் பயன்பாடு உச்சத்தில் இருந்திருக்கிறது.
💥சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் மெர்சிடஸ் பென்ஸ், ஸ்கோடா உட்பட நான்கு கார்கள் புதிதாக வாங்கப் பட்டுள்ளன.
💥இவற்றின் பராமரிப்பு செலவு மட்டும் 11லட்சம் ரூபாய்.
💥எரிபொருள் செலவு 52 லட்ச ரூபாய்.
💥ஏற்கனவே இருந்த 3 கார்கள், ஆட்டோ பராமரிப்பு செலவு 25 லட்ச ரூபாய்.
💥நான்காண்டு தொலைபேசிக்கட்டணம் சுமார் 36 லட்ச ரூபாய்.
💥கிண்டி ராஜ்பவனில் பணியாற்றும் 83 பேருக்கு மாதச்சம்பளமாக ரூபாய் 22.67 லட்சம்.
💥உதகையில் 86.72 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில் மாளிகையில் பணியாற்றும் 24 பேருக்கு மாதச் சம்பளமாக ரூபாய் 6.47 லட்சம்.
💥ஆளுநரின் பயணச்செலவுக்கு ரூ.1.22 கோடி..
💥470 முறை விமானப் பயணம்.
💥1400க்கும் மேற்பட்ட விழாக்களில் அரசு விழாக்கள் 15% மட்டுமே.
💥ஆளுநர் பங்கேற்ற தனியார் நிகழ்ச்சிகள் 85%..இதற்கு செல்லவும் அரசு வாகனங்களே பயன் படுத்தப்பட்டிருக்கின்றன.
💥தனியார் நிகழ்ச்சிகளில் பெறப்பட்ட பரிசுகள் பற்றிய விபரங்கள் கொடுக்கப் படவில்லை..
ஆதாரம்: "ஜூனியர் விகடன் 11/11/2015 இதழ்.
மக்களின் வரிபணத்தை ஆடம்பரமாக செலவு செய்து வாழும் ஆளுநரும் நமக்கு தேவையில்லை. இந்த ஆளுநர் பதவியும் தேவையில்லை. இப்பதவியை நீக்க சட்ட திருத்தத்தை நாம் அனைவரும் கோர வேண்டும்