பாகிஸ்தானில் தேவாலயத்தில் நிகழ்ந்த தற்கொலை படை தாக்குதலில், பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
தென்மேற்கு பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள, சார்கூன் சாலையில் தேவாலயம் ஒன்று உள்ளது. இன்று காலை பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தபோது, உள்ளே புகுந்த 2 தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனிடையே போலீசாருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே, கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொருவர் தமது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்து உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து படுகாயம் அடைந்தவர்கள் மீட்ட போலீசார், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவத்தால் குவேட்டா நகரில் பதற்றம் நிலவுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு, இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.