ஞாயிறு, 17 டிசம்பர், 2017

பிறந்து சில மணி நேரத்தில் ஏரியில் வீசப்பட்ட சிசு! December 17, 2017

வேலூர் மாவட்டம் சோளிங்கர் அருகே பிறந்த சில மணி நேரமே ஆன பெண் சிசுவை ஏரியில் வீசி சென்ற கொலையாளியை காவல்துறை தேடி வருகின்றனர். 

சோளிங்கர் அடுத்த பேரப்பேரி கிராமத்தில் உள்ள ஏரியில், தொப்புள் கொடியுடன் இருந்த பெண் சிசுவை வீசி சென்றுள்ளனர். பேரப்பேரி ஏரி நீரில் குழந்தை மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், இது குறித்து பானாவரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், நீரில் மிதந்து இருந்த பச்சிளம் சிசுவை சடலமாக மீட்டனர். பிறந்து சில மணி நேரத்தில் சிசுவை ஏரியில் வீசி சென்ற நபர் குறித்து வழக்கு பதிவு செய்து பாணாவரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Image

Related Posts: