ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகார்கள் தொடர்பாக சுமார் 30 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை ஆர்.கே.நகருக்கு வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு 3 தினங்களே உள்ள நிலையில், பணப்பட்டுவாடா விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தினகரன் அணியை சேர்ந்த ரவி என்பவர் பணப்பட்டுவாடா செய்ததாக போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்றதை கண்டித்து, ஆர்.கே.நகர் காவல்நிலையம் முன்பு தினகரன் ஆதரவாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதை அடுத்து அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில்தேர்தல் பார்வையாளர் பிரவீன்குமார் நடத்திய சோதனையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த பச்சையப்பன் என்பவரிடம் 13 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்த நபரை திமுகவினர் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்து 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆர்.கே.நகரில் இதுவரை 30 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் அளவுக்கு பணப்பட்டுவாடா நடந்துள்ளதாக புகாரளிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பணப்பட்டுவாடா தொடர்பாக 726 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 711 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 15 புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் மாநகராட்சி மக்கள் தொடர்புத்துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகரில் இறுதிக்கட்ட தேர்தல் ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், பணப்பட்டுவாடா புகார்களால் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் மீண்டும் ரத்தாகுமா என கேள்வியை எழுப்பியுள்ளது.