நாட்டில் பெண்கள் பாதுகாப்பு குறித்து மத்திய மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, வரும் ஜனவரி 10ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிடப்பட்டுள்ளது.
மனநலம் குன்றிய 60 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த வழக்கில் கைதான இளைஞர்கள் ஆண்ட்ரூஸ், பிரபு ஆகியோர் ஜாமின் கேட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இருவரின் ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் நாட்டில் 100 வயது மூதாட்டி முதல் சிறு குழந்தைகள் வரை பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு ஆளாகி வருவது குறித்து வேதனை தெரிவித்தார்.
நாட்டில் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று மத்திய ,மாநில அரசுகளுக்கு நீதிபதி கிருபாகரன் 25 கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்த கேள்விகளுக்கு ஜனவரி 10ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள், தேசிய மகளிர் ஆணையம் மற்றும் தமிழக உள்துறை, காவல்துறை உள்ளிட்டவைகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.