வியாழன், 11 பிப்ரவரி, 2016

உங்களுக்கு தெரியுமா?: கான்சர் செல்களை அழிக்கும் வசாபி...

 வசாபி என்பது என்ன? வசாபி என்பது ஒரு வகை செடி.
ஜப்பான், தாஸ்மானியா, ஹவாய் , ஒரேகான் ஆகிய நாடுகளின் மழைப் பிரதேசங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் பயிரிடப்படுகிறது. இந்தச் செடியின் வேர் மிகவும் சத்தானதால், உணவுகளில் துருவி பரிமாறப்படுகிறது.
Wasabi
பார்பதற்கு இஞ்சி போல் இருக்கும் இதன் நிறம் இளம் பச்சை. வசாபியை பயிரிட்டு வளர்ப்பது மிக கடினமான செயல். இதன் வேர்கள் முழுதாக வளர இரண்டு வருடங்கள் பிடிக்கும். ஒரு கிலோகிரம் வசாபி வேர்கள், நூறு டாலர்கள் வரை மதிப்புள்ளவை.
மிளகாய் போல காரமாக இருக்கும் இதை, துருவிய பதினைந்து நிமிடத்திற்குள் உபயோகிக்கா விட்டால், அதன் சுவைமணம் காற்றில் கரைந்து விடுமாம். ஆகவே இதை பசை போல அரைத்து, ட்யுப்களில் பாதுகாக்கின்றனர். அல்லது, தேவைப்படும்போது துருவி பயன்படுத்துகிறார்கள்.
வாயில் வைத்தவுடன், இதன் காட்டம் முதலில் மூச்சுகுழலில் பரவுவதால், கொஞ்சம் அதிகம் இதை உட்கொண்டால், கொடூரமான வலியை ஏற்படுத்தும். ஆனாலும், மிளகாயின் காரம் போல வசாபியின் காரம் நம் நாக்கில் தங்குவதில்லை.
கொஞ்சம் அதிகபடியான உணவு அல்லது நீரை உட்கொண்டால், இதன் காட்டம் உடனே குறைந்து விடுமாம். இந்த வசாபி கான்சர் செல்களை அழிப்பது, அலர்ஜி, ஆஸ்துமா, எலும்பு நோய்களை மட்டுப்படுத்துவது, ரத்தம் உரைதலை கட்டுபடுத்தி, பக்க வாதம் , நெஞ்சு வலி ஆகியவை வராமல் தடுக்க உதவுகிறது.